பிறப்பின் ரகஸியம்
நிலவாய்
நிர்வாணக் கனியாய்
காரணமாய்
ஏவாள்.
காரியமாய்
கனி காணும்
ஆதாம்.
உடல் தகித்தது
சிவந்து மயங்கிய கருவிழி
சிதைந்து போனது
இதழ் மொழி
எல்லாமும்.
குருதிக் கொப்பளிப்பில்
வேர்வை மணமாய் மழையாய்
மூச்சுக் காற்று வெப்பமாய்
அண்மைக்குள் அண்மையாய்
நாகமாய்ச் சாரையாய்
ஆதாம் ஏவாள்.
கர்த்தரின் கட்டளை
மீறப்பட்டது
மீட்டப்பட்டது
வீங்கிப்போன
பிருஷ்டமும் வயிறுமாய்
ஏவாள்..