Blog Archive

Saturday, November 04, 2006

இங்கே இருக்குது ஜாதி

இங்கே இருக்குது ஜாதி

அல்லி குளக்கரையில் தாமரை
அலரும் புலர்பொழுதில்
குளிக்கும் மலர்களோ ஜாதிப் பூ
சேரி உடல்களுக்கு அங்கே தடை விதிப்பு.

தினம் தினம் நிகழும் எம் சந்திப்பு
இன்றென்ன னது நெஞ்சில் தவிப்பு
இன்னும் வரவில்லை என் காதலி
ஏன்தான் விடிந்ததோ காலைத் தீ.

குனிந்த தலை குனிய குளிப்பாள்
குள மீன்கள் கண் பார்க்க நகைப்பாள்
எத்தனைக் கோடி கதிர் வீசும்
இளைய என் காதலி மேனியிலே.

இப்படி பறந்த என் மனக் குதிரை
இடறி விழுந்தது குரல் கேட்டு.
‘’ யாரடா படுவா படித் துறையில்
என்ன உன் ஜாதி படித்த திமிர்’’......

பண்ணையார் நின்றார் என் எதிரில்
பயத்தில் உறைந்தேன்
நான் சின்ன ஜாதி.
அம்பது சுதந்திரம் கண்டது பூமி
னாலும் என்ன
இங்கே இருக்குது ஜாதி.

விடுதலை

• விடுதலை







கருவறைச் சிறையில்

பூரணமாயிருந்த விடுதலை வேட்கை

தொப்பூழ்க் கொடியின் துண்டிப்பில்

பறிக்கப்பட்டது.



நீ

மாற்றப்பட்டாய்

தனிக் கொட்டடிக்கு

உன் குடும்ப வாழ்க்கைக்கு



இப்போது

உடலுறவுக்கென்று படைக்கப்பட்ட

இன்னொரு உயிராய்

வம்ச விருத்தியின்

சங்கிலித் தொடரின் இணுக்காய்

நீ.



ஜீனோவாக சேவகமும்

வேடிக்கைப் பிண்டமுமாய்

உன் வாழ்க்கை.

உன் உடம்பில் சேவகன் ஆதாமின்

அடிமை இரத்தம்.



அலைகழிக்கும் அக்கம் பக்கம்

பீற்றிக் கொள்ளும் பெருமைக்கு

நீ மாறிக் கொள்வாய்

அரிச்சந்திரனாய்.



உன் பிறப்பின் மறுபடியும்

ஒரு நிரூபனம்;

'மரணத்தில் மட்டுமே

உன் விடுதலை சாத்தியம்'.