Blog Archive

Saturday, March 31, 2007

எத்தனையோ...
கிடைத்தது..நீதியைத் தவிர..
___________________________
சல்லடைப் போட்டுச் சலித்தார்கள்
பெருமளவில் குவிந்தன
கைதவறிய நாணயங்கள்.

கல்யாண மாலைக்கு
காதலிப் பெண்கள் கழற்றி எறிந்த
கைவிரல் மோதிரங்கள்
காதல் பரிசுகள்
இன்னும் எத்தனையோ...

வண்டி வண்டியாய் நாணங்கள்
வாக்குறுதி வார்த்தைகள்

சுண்டலுக்காக விற்கப் பட்ட
காகிதக் கவிதைகளின்
கிழி பட்ட ஏடுகள்

வார்த்தை வாளால் கீறி புதைபட்ட
மறுதலிக்கப் பட்ட
காதல் இதயங்கள்

அவசரத்தில் இட்ட
முத்த மழைகள்
காதல் தீ எரித்த
காதல் திருடர்களின்
கன்னக் கதுப்பில் கசிந்தோடிய கண்ணீர்..
இன்னும் எத்தனையோ...

அலை திருடிய
பிளாஸ்டிக் செருப்பால்
அம்மாவிடம் உதை வாங்கிய
பிஞ்சு மழலையரின் அழுகை

காலைதோறும் கால் நடையான
இதய வாக்கர்களின் பெருமூச்சோடு
வேர்வை கசிந்த ஈர மண்

தமிழ்மாநாட்டில்
தலையெடுத்த சான்றோரின்
சிலை வடித்த கண்ணீரும்
காதல் தமிழும்..

அரசியல்வாதிகள்
அந்திமத்தில் நடத்திய
கட்சித் தாவலில்
கை மாறிய போது
வேண்டுமென்றே
கைவிடடப் பட்ட கொள்கைகள்


சுண்டிச் சோற்றுக்கும்
கஞ்சா இலைக்கும்
கண்பூத்துச் சுற்றிய
போதைக் கால்கள்
இப்படி
இன்னும் எத்தனையோ...

மெரினா மணலை
அலங்கரிக்கும் திட்டத்தில்
லட்சமாய்க் கொட்டி
குப்பையைக் கிளறியதில்
இன்னும் எத்தனையோ...
கிடைத்தது..

கண்ணகி சிலையும்
அவள் கேட்ட நீதியைத் தவிர..--
சக்கரை ரஹஸியம்

''சக்கரை விலை ஏறிக்கிடக்கு
உனக்கு மட்டும் தாராளம்
சக்கரையை வைக்க வேண்டிய இடம்
சிறுநீர் அல்ல''
"இதுபரம்பரை வியாதிப்பா"
டாக்டர் தமாஷ் செய்தார்...

பரம்பரை
என்றதும் தாத்தா ஞாபகம்
பறங்கிப்பேட்டைஅல்வா அவருக்கு உசிரு.
கடலூர் டியூட்டி விட்டு
அல்வாவுக்காக ஆறு மைல் சுற்றுவழி
கொத்தட்டை நேர்வழி விட்டு
பறங்கிப்பேட்டை வழி பஸ் பிடிப்பேன்
திருநெல்வேலி எட்டாத தூரம்.

"எங்க பரம்பரையில் பெஞ்சாதி அதிகம் உண்டு
சக்கரை தட்டுப்பாடுதான் டாக்டர்"
டாக்டர் அசரவில்ல.

"என்னவேலைப் பாக்கிறே"கேட்டார்
"பேங்கில வேலை ராஜா வாட்டம்"

"கார்த்தால எப்ப எழுவே"
"ஏழரை ..விட்டா எட்டு"

"எழுந்தவுடன் என்ன செய்வே"
டாக்டர் கேட்டார்
"பாத்ரூமில் புகை விடுவேன்
வராத போது பேப்பர் கூட படிப்பேன்"

"சாப்பாட்டுப் பழக்கம் எப்படி"
டாக்டர் கேட்டார்
"காலையில் இட்லி சாம்பார் வெட்டுவேன்
காபி, டீ நாளைக்கு எட்டு
மணி தவறாது சிகரெட்டு
மதிய சாப்பாடு முனியாண்டியில
மாலை டிபன்
கேசரி(அ) அல்வா கட்டாயம் உண்டு
ராத்திரி சொல்லட்டா...."கேட்டேன்

"உட்கார்ந்து தின்னும் உன்மத்தன்"
டாக்டர் முணுமுணுத்தார்.

"சரி .. உன் பாட்டன் எப்படி ?
சொல் பார்க்கலாம்"

"தாத்தாவுக்கு எண்பது வயது;கிழம்
விடியலில் துயில் எழும்
வயல் வரப்பில் கடன் கழிக்கும்
காலையில் கேப்பக்களி
மதியான சாப்பாடு மரக்கறி தான்
தோட்டத்துக் காய்கனி, கீரைகள் ஏராளம்
ஆனாலும்
அவரோட மண்புழு 'பாடு'க்கு
இவையெல்லாம் எம்மாத்திரம்?

'போதும் உன் சங்கதி'
புகன்றார் டாக்டர்
'சக்கரை உனக்குப் பரம்பரை இல்லை;
சாப்பிட்ட சக்திய உடம்பு கிரகித்துக் கொள்வது
கற்க: கற்ற பின் நிற்க;அதற்கு தக போல
எஞ்சிடும் சக்கரை புத்திரர் போல;
அதிகம் சேரக்கூடாது
மாத்திரை போடு.
டயட் முக்கியம்;
இதற்கும் மேலாக
இன்னொன்று முக்கியம்
உன் பாட்டன் செய்கிற
எண்பது வயதிலும் மண்புழு உழப்பு.

என் டயபடிக் ரஹஸியம்
புரிய தொடங்கியது.
-கெட்டிக்கார தலைவி
---------------------------------------
சம்பள தேதியில்
இனிப்பு இத்யாதிகள்
வாங்கிச் செல்கிற வழக்கம்
அன்றும் அப்படித்தான்..........

பிரித்து எடுத்த ஸ்வீட் பாக்ஸை
சற்றிக் கொண்டனர் பிள்ளகள்!
மழலையில் கேட்ட கடைக்குட்டி
'அப்பா எனக்கும்'

மனயாட்டி வந்தாள்
வீட்டின் முதல் தைரியசாலி.

'இப்படித்தான் கையில் இருந்தால் தங்காது-
ஊதாரி'
முதல் தகவல் அறிக்கை-
குற்றப் பத்திரிகையை வாசித்தாள்!

பயத்தில் பெற்றோர்கள் பிள்ளகள்
இப்போ எல்லோரும்
என் எதிரணியில்.

எதிர்பார்ப்பு நடந்தேறியது
நிதிஇலாகா சமையற்கட்டிற்கு மாற்றப் பட்டது.
மாமிசம் கூடாது புத்தராய்
கொலஸ்டிரால் புராணம் டாக்டராய்
தினமும் அப்பளம் ரசம் கஞ்சி
சிக்கனம் பின்பற்றப்படுகிறது
பிள்ளைகள் மாட்டினர்
ஞாயிறு கிழமையில் வீட்டில்
நாய்கூட உண்பதில்லை.

கெட்டிக்கார மனைவி
மாசக்கடைசியில்
திடீர் பளபளப்பில்
காஞ்சி புரத்தில் ஒரு சுற்று கூடியிருந்தாள்

இப்போது பெற்றோர்கள்
பிள்ளைகள் என எல்லோரும்
செய்வதறியாது
கையப் பிசைகிறார்கள்
அமர்த்திவிட்டு அவதிபடும்
மக்களைப்போல.......................

மறப்பதற்குள் எடுக்க வேண்டும்

மறப்பதற்குள் எடுக்க வேண்டும்
வகுப்பு.
____________________

பகுபதம்.
நீயும் நானும்

சிவன் பார்வதி.
உறுப்பு இலக்கணம்

லிங்கம் வித்து
அதன் உதாரணம்.

மறப்பதற்குள் எடுக்க வேண்டும்
வகுப்பு.
காகிதக் கவிதைகள் தின்பதற்கு.

நீயா உன் எதிரா
எதிர் எதிர் துருவம் எது
ஆணும் பெண்ணுமா
ஆண்டான் அடிமையா
காமத்தீயின் முன் எரிந்தது
காமனை எரித்தான்
உடைகள் களைந்து.

உண்டானது பருவ வழிபாடு
உண்டாக்கப் பட்டது
உண்டானது
பூமி தளிர் தளிருடல்
ஆலிலை அரசன் எனும் மரம்
பூ பிஞ்சு பேதை
பெண் எனும் போதை
அடிமை பண்பாடு
பகுபதம் பல ஜாதி
மனுகுலம்
இன்னும் இன்னும்
இப்படி.. இப்படியே


லிங்க யோனிப் படிமங்கள்
வழிபாடா
மனப் பாலின் விகார ஒற்றா எச்சமா
எது முதல் எது முடி(வு)
ஆப்பிள் வேண்டுமா
ஆதம் ஏவள் சுற்றிக் கிடந்த அவாவா
எது முதல் ஏன் தொடர்
எல்லாம் மறந்தது
இதுமட்டும் நிஜம்.

மறப்பதற்குள் எடுக்க வேண்டும்
வகுப்பு.
காகிதக் கவிதைகள் தின்பதற்கு.

Wednesday, March 14, 2007

எந்த சுதந்திரம் எங்களுக்கில்லை?

எந்த சுதந்திரம் எங்களுக்கில்லை?
_______________________________________

எந்த சுதந்திரம் எங்களுக்கில்லை?
விடியலே இல்லாத இந்த
வீணர் வாழ்க்கையில்..

கொடிகள் கட்டுவோம்
கோஷங்கள் இடுகிகிறாம்
மந்திரி வருகையில்
மாலை அணிவித்து
மனுக்கள் தருகிறோம்
எந்த சுதந்திரம் எங்களுக்கில்லை ?
விடியலே இல்லாத இந்த
வீணர் வாழ்க்கையில்.

வாக்குகள் அளிக்கிறோம் வாழும் குடிசைகள்
தீப்பற்றி எரிகையில்
வீதிவெளியினை வீடாய்க்கொண்டு
வீழ்ந்துக் கிடக்கிறோம்
எந்த சுதந்திரம் எங்களுக்கில்லை?
விடியலே இல்லாத இந்த
வீணர் வாழ்க்கையில்.

காதல் போதையில் கற்பழிழப்பும்
காவல் நிலையங்களில்
பெண்கள் கற்பழிப்பும்
என்று இத்தனைச் சுதந்திரம் இருக்கையிலே
எந்த சுதந்திரம் எங்களுக்கில்லை?
விடியலே இல்லாத இந்த
வீணர் வாழ்க்கையில்

ஆசைகள் இல்லையா ஆனாலும் வாழ்கிறோம்
மன்னர் மான்யம் ஓழித்த மன்னர்கள்-தினம்
மலம் அள்கிறோம்-என்று
இத்தனைச் சுதந்திரம் இருக்கையிலே
எந்த சுதந்திரம் எங்களுக்கில்லை?
விடியலே இல்லாத இந்த
வீணர் வாழ்க்கையில்


கிராமத்துக் கடற்கரை.

கிராமத்துக் கடற்கரை

அவளின்றி
வெறிச்சோடிப் போன
மனம் போல
எவரும் இல்லா
கிராமத்துக் கடற்கரை.

வழியில்
பெரிதாயக் குறுக்கிடும்
உப்பங்கழி
அகலாத அவளின்
நினைவுகள் போல.

நண்டுப் பிள்ளைகள் நடையுடன்
நேற்று சேர்ந்து நடந்த
காலடிச் சுவடுகள்
மணற் பரப்பெங்கும்
தொடர்கதையாக..

ஜோடித் தென்னையின் அடிவாரத்தில்
அவளுடன் கூடிக் களிகொண்டாடிய
அழியாத மணல் குன்றுகள்
பிரமிடுகள் போல
உள்ளே கல்வெட்டு நினைவுகள்
தழுவிய கணங்களின்
தழும்பான மனவோட்டம்
கடலலையாக

தூரத்தில் திட்டுத் தீவில்
சிறிதும் பெரிதுமாய் சவுக்கு மரங்கள்
நாங்கள் புணர்ச்சிப் புயலில்
சிக்கிய போது
அபயம் அளித்த தென்றல் வங்கிகள்
அதன் அடிவாரத்தில் சல்லி வேரில்
உடைந்துப் போன வளையல் துண்டுகள்
அவள் வராது தவிக்கும்
என் மனம் போல
யாருமில்லாத
எங்களூர் கடற்கரை.

Tuesday, March 13, 2007

ஜோதி கவிதைக்கள்

ஜோதி கவிதைக்கள்
• கிராமத்துக் கடற்கரை

அவளின்றி
வெறிச்சோடிப் போன
மனம் போல
எவரும் இல்லா
கிராமத்துக் கடற்கரை.

வழியில்
பெரிதாயக் குறுக்கிடும்
உப்பங்கழி
அகலாத அவளின்
நினைவுகள் போல.

நண்டுப் பிள்ளைகள் நடையுடன்
நேற்று சேர்ந்து நடந்த
காலடிச் சுவடுகள்
மணற் பரப்பெங்கும்
தொடர்கதையாக..

ஜோடித் தென்னையின் அடிவாரத்தில்
அவளுடன் கூடிக் களிகொண்டாடிய
அழியாத மணல் குன்றுகள்
பிரமிடுகள் போல
உள்ளே கல்வெட்டு நினைவுகள்
தழுவிய கணங்களின்
தழும்பான மனவோட்டம்
கடலலையாக

தூரத்தில் திட்டுத் தீவில்
சிறிதும் பெரிதுமாய் சவுக்கு மரங்கள்
நாங்கள் புணர்ச்சிப் புயலில்
சிக்கிய போது
அபயம் அளித்த தென்றல் வங்கிகள்
அதன் அடிவாரத்தில் சல்லி வேரில்
உடைந்துப் போன வளையல் துண்டுகள்
அவள் வராது தவிக்கும்
என் மனம் போல
யாருமில்லாத
எங்களூர் கடற்கரை.

கிராமத்துக் கடற்கரை

• கிராமத்துக் கடற்கரை

அவளின்றி
வெறிச்சோடிப் போன
மனம் போல
எவரும் இல்லா
கிராமத்துக் கடற்கரை.

வழியில்
பெரிதாயக் குறுக்கிடும்
உப்பங்கழி
அகலாத அவளின்
நினைவுகள் போல.

நண்டுப் பிள்ளைகள் நடையுடன்
நேற்று சேர்ந்து நடந்த
காலடிச் சுவடுகள்
மணற் பரப்பெங்கும்
தொடர்கதையாக..

ஜோடித் தென்னையின் அடிவாரத்தில்
அவளுடன் கூடிக் களிகொண்டாடிய
அழியாத மணல் குன்றுகள்
பிரமிடுகள் போல
உள்ளே கல்வெட்டு நினைவுகள்
தழுவிய கணங்களின்
தழும்பான மனவோட்டம்
கடலலையாக

தூரத்தில் திட்டுத் தீவில்
சிறிதும் பெரிதுமாய் சவுக்கு மரங்கள்
நாங்கள் புணர்ச்சிப் புயலில்
சிக்கிய போது
அபயம் அளித்த தென்றல் வங்கிகள்
அதன் அடிவாரத்தில் சல்லி வேரில்
உடைந்துப் போன வளையல் துண்டுகள்
அவள் வராது தவிக்கும்
என் மனம் போல
யாருமில்லாத
எங்களூர் கடற்கரை.

நடைப் பயிற்சி

நடைப் பயிற்சி
_______________________


ப்ரஷர் இன்னமும் இருக்கு
எடை குறையனும்
நடைப் பயிற்சி செய்யுங்க
மாத்திரை எடுத்துக்குங்க
டாக்டர் சொன்னார்..
நடக்கத் தொடங்கினேன்

டாக்டர் செலவோடு
நடைப் பயிற்சிக்கு
ஷீ, சாக்ஸ்,வெள்ளை நிறத்தில்
டீ ஷர்ட் பேண்ட்
வாங்கிய வகையில்
மேலும் ஓராயிரம்
கை காசு கரைந்தது

காலை நடைப் பயிற்சியில்
பயணத்தின் குறுக்கில்
எங்களூர் இடுகாடு வந்தது
சிநேகமாய் பார்த்தது.
இடப்பிரச்னையில்
என் வரவை
அது விரும்பவில்லையோ
அல்லது பிணங்களைப் பார்த்துப் பார்த்து
அதற்கும் சலிப்போ?

தினம் நிகழ்ந்த நடைப் பயிற்சி
ஒருநாள் சலித்தது.
மாலையில் வரவேற்ற இடுகாடு சொன்னது:

காலையில் வந்திருக்கலாம்
வந்திருந்தால்
இப்போது வர அவசியம் நேர்ந்திருக்காது.