Blog Archive

Sunday, December 05, 2004


பிறப்பின் ரகஸியம்
நிலவாய்
நிர்வாணக் கனியாய்
காரணமாய்
ஏவாள்.

காரியமாய்
கனி காணும்
ஆதாம்.

உடல் தகித்தது
சிவந்து மயங்கிய கருவிழி
சிதைந்து போனது
இதழ் மொழி
எல்லாமும்.

குருதிக் கொப்பளிப்பில்
வேர்வை மணமாய் மழையாய்
மூச்சுக் காற்று வெப்பமாய்
அண்மைக்குள் அண்மையாய்
நாகமாய்ச் சாரையாய்
ஆதாம் ஏவாள்.

கர்த்தரின் கட்டளை
மீறப்பட்டது
மீட்டப்பட்டது
வீங்கிப்போன
பிருஷ்டமும் வயிறுமாய்
ஏவாள்..

Saturday, October 30, 2004

தண்ணிக் கலவரம்

தண்ணிக் கலவரம்
_________________
ஆண்குறி பார்த்து
படுகொலை நடந்த
நவகாளியை
அண்மையில் பார்த்தோம்
குஜராத்தில்.

ஆண்களின் பெயரில்
அன் விகுதிப் பார்த்து
அடித்து நொறுக்குது
பெங்களூரூ
அது எங்க ஊரு.

உயிருக்குப் பயந்து
மஞ்சள் கயிறு
மணியானது
கருக மணியானது
பல உயிர்கள் பலியானது.

மல்லையா கடையில
கொட்டிக் கொடுத்து
குடிக்கிறோம் சாராயம்
வெட்கமில்லே..
தண்ணிக்கு மட்டும்
தாலி இழக்கிறோம்
முதுகில எலும்பு இல்லே.

சினிமா தியேட்டரை
மூடினா போடுற
பேப்பரு
தண்ணியை மட்டும்
அந்துமணி குந்துமணி
ஆக்குது....

ஒற்றுமையா இருக்குது இந்தியா
மேப்புல
நல்லா சிரிக்கிறார் காந்தி
நோட்டுல.

நாம் இருப்பது நகரம்

kavithaikkaL
நாம் இருப்பது நகரம்
தீவல்ல.
ஆடைகள்
குறையும் கூடலாம்

இலை தழைகள்
தீவுக்கானது
நமக்கானது அல்ல..

நிர்வாண நகரங்கள்
நிர்மாணமாக
இன்னும்
பூமி சபிக்கப் படவில்லை
அந்நாளில்
நாம்
அலைகடலின் ஓரத்தில்
ஒதுங்கலாம்
அல்லது
சுறை குடுக்கைக்குள்
மனித உற்பத்திக்காக
மனிதனின் உயிரணுக்கள்
தேவதைகளால்
சிந்தாமல் சேகரிக்கப் படலாம்
அதுவரையிலும்
பிடிக்கவில்லையென்றாலும்
நமக்காக தறிக்கப் பட்ட
டைகளை அணிந்தே கணும்
இதுகட்டாயம்.

தாமுக்கும்
அவன் காதலிக்கும்
நெய்யப் பட்டது
நிர்வாணம் மட்டுமல்ல
அவர்கள்
உடுத்திக் கொண்டிருந்தார்கள்
இச்சையை.
இச்சை டையை
நிர்வாணப் படுத்தி
அவர்கள்
உடுத்திக் கொண்டிருந்தார்கள்
அவர்களின்
ஆசை உடுப்பு
உங்களுக்கு
நிர்வாண்மாயிருந்தது
அவர்களின்
உடையின் பெயர் நிர்வாணம்
நீங்களும்
உடுத்திக் கொண்டிருந்தீர்கள்
அரை குறையாக
உங்கள் அரை குறையை
உடுப்பென்றே
சாதித்தீர்கள்

நிர்வாணம்
உண்மையில் அது
நிர்வாணம் அல்ல
நிஜ டை.
ஆசையில்லா டை.

சதைமோகத்திற்கு மட்டுமே
டைகள் அவசியம்
ஏவாளீன் நிர்வாணம்
உஙகளின்
உற்பத்திக்காக
அவர்களின் தேவை உற்பத்தி
முதலிரவின் போது
களையும் டைகளும்
பழத்தட்டு வரிசைகளும்
உங்களுக்குப் பரிச்சயம் என்றால்
உங்களின் சாபம்
அவர்களுக்கானது அல்ல..

காமன் அவர்களிடை தீ மூட்டினான்
நீங்களோ காமனைச் சாக்கிட்டு
வெந்து மடிகிறீர்கள்
காமனின் மிச்சமான
காதல் தீயில்.


நிரந்தரமானவன்.

நிரந்தரமானவன்.
____________________________
கவலையை விடு
காதற் கோப்பகளில்
ஊற்றப்படுவது
எப்போதும்
"தோல்வி” விஷம் தான்.

இறங்கி முங்கினால்
குளிர் விட்டுப் போகும்
ஆற்று நீர் காதல்
கசந்து தான் போகும்.

காதலில் உயர்ந்தது கைக்கிளை
மீறி தொடர்வதெல்லாம்
முடிவில் முகாரி தான்.

காதல் நாடகம்
அவளின்றி நடக்கலாம்
வேறொரு துணையுடன்--
ஆனால்
நீ முக்கியம்
ஏனென்றால்
நீ மாண்டுப் போகிற காதலோ
காதலியோ அல்ல
கவிஞன் ...

நிரந்தரமானவன்.
_____________"ஜோதி"_
(jeyapalt@yahoo.com)
த.செயபால்., எம்.ஏ. பி.ஜி.எல்., டி.எச்.பி.எம்.,
1258, பூம்புகார் நகர், கொளத்தூர், சென்ன-600 099.

Wednesday, October 06, 2004

காவிரித் தாயே

காவிரி தாயே
_______________________
காவிரித் தாயே
காவிரித்தாயே
உன்வயிற்றுதித்தோம்
ஒருமார் குடித்தோம்
சாதிச் சண்டைகள்
பல பல இட்டோம்

நெல் மணிகளாய்
குவிந்த தஞ்சையில்
கரிப்பு மணிகள்
கரைபுரண்டோடுது
முப்போகம் விளைந்த
தஞ்சை மண்ணில்
கருவேல மரம் கூட
கருகி சாகுது.

சாராயம் விற்கிற அரசாங்கம்
குடிக்கிற தண்ணிக்கு
வானத்தைக் காட்டுது.
பக்கத்து ஸ்டேட்டு பங்காளி
சாராயாம் விற்குறான் கோடிக்கு
தண்ணீர் கேட்டா
கன்னடம் என்கிறான் ரோட்டில.
ஆரியம் தூற்றினோம்
திராவிடம் பேசினோம்
காவிரி தண்ணிக்கு
மஞ்சக் கயித்த
கருக மணிக்கு மாத்தினோம்.

சுதந்திரத்துக்கு முந்தி
உறுப்பை சோதிச்சி
நடந்திச்சி இனப் படுகொலை
தண்ணிக் கேட்டதால்
தாலிய பார்த்து சகிக்கலை
உறுப்பைப் பார்த்து
ஆணை செஞ்சாங்க படுகொலை
பெயரில்
ஆண் விகுதிப் பார்த்து
விரட்டி அடிச்சாங்க
தமிழ்க் குடிகளை.
சுதந்திரம் அடைஞ்சி
அம்பது கழிஞ்சி
பர்தா பாத்து சிசுக்கொலை நடந்திச்சி
முடியலை
ஒர் இன திராவிடப் பிள்ளைகள்
எப்படி ஆயினர் சுயநலப் பேய்களாய்.

நெல்லும் இல்லை
கரும்பும் இல்லை
பருத்தி போட்டோம்
மாரியும் வரல்லை
பொம்மி ஆட்சியில் விளைந்ததெல்லாம்
பொத்தாம் பொதுவில் அடக்குமுறை

திருவள்ளுவர் திருநாள்
கொண்டாடக் கூடாது
கண்ணகிச் சிலையா
கூடவே கூடாது.
புள்ளிராஜா விளம்பரம்
பொம்பளை இங்கே
பொம்பளைங்க கற்பை
கேலி பேசலாம்.

சுக்கில பட்சத்து சூரியன்
பொங்கல் தின்ன வாரானாம்
பஞ்சாங்கம் போட்டு விற்குரான்
இனி
புழுத்த அரிசி
கைத்தறிச் சேலைக்கு
கையேந்த வேணாம்
போகிக்கு ஆகும்
'எச்' கார்டு முத்திரை.