Blog Archive

Thursday, December 22, 2016

மினீஸ்வரனுக்கு நேர்ந்துவிட்ட ஆட்டுக் கிடாய்


மினீஸ்வரனுக்கு நேர்ந்துவிட்ட ஆட்டுக் கிடாய்
எதிரே வந்த மாதிரி
அம்புட்டு நாத்தம்
குதிரைமேல் சவாரி
எலுமிச்சைக் குத்தின வீச்சரிவாளோடு
பெரிய வீட்டு வாரிசு
பார்த்த சனம்  
சாமியக் கண்டு விலகி ஒடுங்கிச்சி

அந்த அதிகாலை வேளையில்
முனியம்மா
மஞ்சபூசி
குளிச்சி முழுகி
வாளிப்பான கருங்கல் மேனி மினுக்க
சந்தன அபிஷேகம் மாதிரி முகமும்
முண்டை செருக்கி

கிழக்குப்பார்த்த வெட்ட வெளி டீக்கடைக்குள்ளார
அதிகாலை கிடாவெட்டு மினீஸ்வரனுக்கு
சீக்குப் பயச்சாமி
இன்னொத்தையும் காவு கொண்டான்
ஊரே நாறிச்சி
கேக்க சனம் இல்ல
கெட்ட சாதிக்கும் தெம்பில்ல.
பாவப் பொறப்புங்க
எத்தனைப் பொம்பளைங்க
இதுக்கு மட்டும் சாதியில்ல
எங்க ஊரு சாமிங்களுக்கு.

சாமிக்கு அடிவயித்து கட்டியாம்.
அடையாறு ஆசுபத்திரிக்குப் போய் வருதாம்
விரசா நெருங்கிடுமாம் சாவு
சாமியோட சாவுல

அத்தனைச் சந்தோஷம் குடிபடைக்கு.

No comments: