Blog Archive

Wednesday, October 06, 2004

காவிரித் தாயே

காவிரி தாயே
_______________________
காவிரித் தாயே
காவிரித்தாயே
உன்வயிற்றுதித்தோம்
ஒருமார் குடித்தோம்
சாதிச் சண்டைகள்
பல பல இட்டோம்

நெல் மணிகளாய்
குவிந்த தஞ்சையில்
கரிப்பு மணிகள்
கரைபுரண்டோடுது
முப்போகம் விளைந்த
தஞ்சை மண்ணில்
கருவேல மரம் கூட
கருகி சாகுது.

சாராயம் விற்கிற அரசாங்கம்
குடிக்கிற தண்ணிக்கு
வானத்தைக் காட்டுது.
பக்கத்து ஸ்டேட்டு பங்காளி
சாராயாம் விற்குறான் கோடிக்கு
தண்ணீர் கேட்டா
கன்னடம் என்கிறான் ரோட்டில.
ஆரியம் தூற்றினோம்
திராவிடம் பேசினோம்
காவிரி தண்ணிக்கு
மஞ்சக் கயித்த
கருக மணிக்கு மாத்தினோம்.

சுதந்திரத்துக்கு முந்தி
உறுப்பை சோதிச்சி
நடந்திச்சி இனப் படுகொலை
தண்ணிக் கேட்டதால்
தாலிய பார்த்து சகிக்கலை
உறுப்பைப் பார்த்து
ஆணை செஞ்சாங்க படுகொலை
பெயரில்
ஆண் விகுதிப் பார்த்து
விரட்டி அடிச்சாங்க
தமிழ்க் குடிகளை.
சுதந்திரம் அடைஞ்சி
அம்பது கழிஞ்சி
பர்தா பாத்து சிசுக்கொலை நடந்திச்சி
முடியலை
ஒர் இன திராவிடப் பிள்ளைகள்
எப்படி ஆயினர் சுயநலப் பேய்களாய்.

நெல்லும் இல்லை
கரும்பும் இல்லை
பருத்தி போட்டோம்
மாரியும் வரல்லை
பொம்மி ஆட்சியில் விளைந்ததெல்லாம்
பொத்தாம் பொதுவில் அடக்குமுறை

திருவள்ளுவர் திருநாள்
கொண்டாடக் கூடாது
கண்ணகிச் சிலையா
கூடவே கூடாது.
புள்ளிராஜா விளம்பரம்
பொம்பளை இங்கே
பொம்பளைங்க கற்பை
கேலி பேசலாம்.

சுக்கில பட்சத்து சூரியன்
பொங்கல் தின்ன வாரானாம்
பஞ்சாங்கம் போட்டு விற்குரான்
இனி
புழுத்த அரிசி
கைத்தறிச் சேலைக்கு
கையேந்த வேணாம்
போகிக்கு ஆகும்
'எச்' கார்டு முத்திரை.

No comments: