Blog Archive

Tuesday, March 13, 2007

ஜோதி கவிதைக்கள்

ஜோதி கவிதைக்கள்
• கிராமத்துக் கடற்கரை

அவளின்றி
வெறிச்சோடிப் போன
மனம் போல
எவரும் இல்லா
கிராமத்துக் கடற்கரை.

வழியில்
பெரிதாயக் குறுக்கிடும்
உப்பங்கழி
அகலாத அவளின்
நினைவுகள் போல.

நண்டுப் பிள்ளைகள் நடையுடன்
நேற்று சேர்ந்து நடந்த
காலடிச் சுவடுகள்
மணற் பரப்பெங்கும்
தொடர்கதையாக..

ஜோடித் தென்னையின் அடிவாரத்தில்
அவளுடன் கூடிக் களிகொண்டாடிய
அழியாத மணல் குன்றுகள்
பிரமிடுகள் போல
உள்ளே கல்வெட்டு நினைவுகள்
தழுவிய கணங்களின்
தழும்பான மனவோட்டம்
கடலலையாக

தூரத்தில் திட்டுத் தீவில்
சிறிதும் பெரிதுமாய் சவுக்கு மரங்கள்
நாங்கள் புணர்ச்சிப் புயலில்
சிக்கிய போது
அபயம் அளித்த தென்றல் வங்கிகள்
அதன் அடிவாரத்தில் சல்லி வேரில்
உடைந்துப் போன வளையல் துண்டுகள்
அவள் வராது தவிக்கும்
என் மனம் போல
யாருமில்லாத
எங்களூர் கடற்கரை.

1 comment:

Anonymous said...

ஜோதி கவிதைக்கள்